Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. -
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம்
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் மோசமான நண்பர்களாக இருப்பார்களாம்... இவங்ககூட பழகுறது ரொம்ப கஷ்டம்...!
நண்பர்கள் நம் அனைவரின் வாழ்க்கையிலும் கிடைத்த பொக்கிஷங்களாவர். இந்த உலகில் பெற்றோர் இல்லாதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் நண்பர்கள் இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். நல்ல நண்பர்கள் நம் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் அனைத்து நண்பர்களுமே எப்போதும் நல்ல நண்பர்களாக அமைந்து விடுவதில்லை. சிலர் மிகவும் மோசமான நண்பர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் வலிமையான ஆளுமை கொண்டவர்களாக இருந்தாலும் ஒரு நண்பராக அவ்வளவு நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நண்பர்களை விட தங்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுயநலவாதிகளாக இருப்பார்கள், மேலும் அவர்களுக்கு துரோகம் செய்யவும் தயங்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் மோசமான நண்பர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் வலுவான விருப்பம், தீவிரமான இயல்பு மற்றும் போட்டித்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணாதிசயங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களுக்கு நேர்மறையான முடிவுகளை வழங்கலாம், ஆனால் அவர்கள் சில சமயங்களில் மோசமான நண்பர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து கவனத்தைத் தேடுவார்கள், அனைத்தும் தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அவர்களின் மனக்கிளர்ச்சி சிந்தனையற்ற செயல்களுக்கும் புண்படுத்தும் வார்த்தைகளுக்கும் வழிவகுக்கும். அவர்களுடன் நண்பராக இருக்க, உங்கள் தேவைகள் மற்றும் எல்லைகள் குறித்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தொடர்பு கொள்வது அவசியம். அவர்கள் எப்போதும் மோதல்களை உண்டாக்குபவர்களாக இருப்பார்கள். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பேசுவதில் கில்லாடிகளாகவும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களாக இருப்பார்கள். இருப்பினும், இதே குணாதிசயங்கள் உறவுகள் விஷயங்களில் அவர்களுக்கு எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். அவர்களின் சூழலுக்கு ஏற்ப மாறும் குணம் அவர்களை நம்பத்தன்மையற்ற நண்பர்களாக மாற்றலாம். அவர்கள் நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க போராடலாம், இதனால் அவர்களின் நண்பர்கள் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அவர்களுடன் நண்பர்களாக இருப்பதற்கு, பொறுமையாகவும் புரிந்துகொள்ளுதலுடனும் இருப்பது மிகவும் முக்கியம். அவர்களின் மாறும் மனநிலையையும், சுயநல எண்ணத்தையும் புரிந்து கொண்டு அவர்களுடன் ஒத்துப்போக நீங்கள் மிகவும் நல்ல நண்பராக இருக்க வேண்டும்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் கவர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் கவனத்தை ஈர்க்கும் விருப்பத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணாதிசயங்கள் அவர்களை கவர்ச்சிகரமான நண்பர்களாக மாற்றும் அதே வேளையில், அவர்களை நம்ப முடியாத அளவிற்கு சுயநலவாதிகளாகவும் மாற்றும். அவர்கள் தங்கள் நண்பர்களின் சாதனைகள் மற்றும் வேலையை தங்களுடையது என்று கூறிக்கொள்வார்கள்.
தங்களின் புகழ் வெளிச்சம் மற்றவர்களுக்கு செல்லக் கூடாது என்று நினைப்பார்கள், அது அவர்களின் நண்பர்களாக இருந்தாலும் கூட. அவர்களின் பாராட்டுக்களை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டால் உடனடியாக அவர்களின் நட்பை புறக்கணிப்பார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து அதிக விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மோசமான நண்பர்களாக மாறலாம்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பொறுப்பான, ஒழுக்கமான மற்றும் லட்சிய சார்ந்த நபர்களாகக் இருப்பார்கள். இந்தப் பண்புகள் போற்றத்தக்கவை என்றாலும், இந்த குணங்கள் அவர்களை உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நண்பர்களாக மாற்றும். அவர்கள் நட்பை விட தங்கள் தொழில் மற்றும் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம், இது உறவுகளை புறக்கணிக்க வழிவகுக்கும்.
அவர்கள் அதிகமாக விமர்சனம் செய்பவர்களாகவும், நட்பில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம், இதை பூர்த்தி செய்வது அவர்களின் நண்பர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கலாம். அவர்களுடன் நட்பைப் பேண, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவது அவசியம். அவர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

