Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் தலைவராவதற்காகவே பிறந்தவர்களாம்... எங்க போனாலும் இவங்க ராஜாதான்...!
சிறிய குழுவோ அல்லது பெரிய நாடோ எதுவாக இருந்தாலும் அதற்கு தலைவராக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் அனைவராலும் தலைவராக முடியாது. தலைவருக்குரிய தகுதி என்பது அனைவரிடமும் காணப்படுவதில்லை. வெகுசிலரிடம் மட்டுமே அதற்கான தகுதிகள் இருக்கும். அப்படிப்பட்டவர்களை தலைவர் பதவி தானாக தேடிச் செல்லும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்களிடம் தலைவருக்குரிய தகுதிகள் இயல்பாகவே இருக்கும். இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல சிறப்பு குணங்கள் இவர்களிடம் இருக்கும். இது அவர்களை அவரவர் துறைகளில் தலைவர்களாக மாற்றுகிறது. இந்த பதிவில் மாதத்தில் பிறந்தவர்களிடம் தலைவருக்குரிய சிறப்பு குணங்கள் இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தைக் கணிக்கும் தொலைநோக்கு பார்வைக் கொண்டவர்கள். அவர்கள் புதிய திட்டங்களைத் தொடங்கி மற்றவர்களை தங்கள் இலக்குகளை அடைய வழிநடத்துகிறார்கள். அவர்களின் அசாதாரண தைரியமும், தன்னம்பிக்கையும் பெரும்பாலும் அவர்களை பயப்படமால் ரிஸ்க் எடுக்கத் தூண்டுகின்றன, இது அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
அவர்களின் மன உறுதியும், சுதந்திரமும் அவர்களுக்கு தைரியமான முடிவுகளை எடுக்கவும், மற்றவர்களை வழிநடத்தவும் தேவையான திறனை அளிக்கிறது. அவர்கள் புதுமையாக சிந்திக்கக் கூடியவர்கள் மற்றும் மற்றவர்களின் யோசனைகளை கேட்கவும் தயாராக உள்ளனர். இது அவர்களை தலைவராக மாற்றுகிறது.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஆற்றலுக்கும், வசீகரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். மக்களை ஈர்க்கும் மற்றும் வழிநடத்தும் திறன் அவர்களிடம் இயற்கையாகவே உள்ளது. அவர்களின் உற்சாகமும்,ஆர்வமும் மற்றவர்களுக்கு எளிதில் பரவக் கூடியவை, இது அவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றுகிறது. அவர்கள் அங்கீகாரம் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள், மற்றவர்களும் முன்னேற உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் அன்பான இயல்பு அவர்களை அணுகக்கூடியவர்களாக ஆக்குகிறது, மேலும் மக்கள் இயல்பாகவே அவர்களின் வழியைப் பின்பற்ற விரும்புகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பிடித்த தலைவர்காளக இருப்பார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தத்துவ ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்கள் எப்போதும் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும், தங்கள் ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் உற்சாகத்தாலும், வெளிப்படையான அணுகுமுறையாலும் தங்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
அவர்கள் உடல்ரீதியாகவும், அறிவுரீதியாகவும் நீண்ட காலம் ஒரே இடத்தில் ஒரே நிலையில் இருப்பதில் திருப்தி அடைவதில்லை. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்புகிறார்கள். இது அவர்களை வழக்கத்திற்கு மாறான தலைவர்களாக மாற்றுகிறது.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் லட்சியம், ஒழுக்கம் மற்றும் பணி நெறிமுறைகள் காரணமாக இயற்கையாகவே தலைவர்களாக உள்ளனர். அவர்கள் இலக்கு என்பது பற்றிய தெளிவான பார்வையையும், அதை அடைவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டத்தையும் கொண்டுள்ளனர்.
அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள், பொறுமையானவர்கள் மற்றும் தங்கள் இலக்குகளுக்காக கடினமாக உழைக்கத் தயாராக உள்ளனர். வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும், தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள், இது அவர்களை தலைமைப் பதவிகளில் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக அழைத்துச் செல்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












