Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அனுமன் ஜெயந்தியான இன்று உருவாகும் பஞ்சகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Panchgrahi Yog On Hanuman Jayanti 2025: பொதுவாக ஒரு பண்டிகை ஒரு ஆண்டில் ஒருமுறை தான் கொண்டாடப்படும். ஆனால் அனுமன் ஜெயந்தி மட்டும் ஒரு ஆண்டில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை நாளிலும், வடஇந்தியாவின் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளிலும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று வடஇந்தியாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த அனுமன் ஜெயந்தி வட இந்திய பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படும். ஜோதிடத்தின் படி, இந்த அனுமன் ஜெயந்தி நாளான இன்று பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த அற்புதமான நிகழ்வு சுமார் 57 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகிறது. இந்த பஞ்சகிரக யோகமானது மீன ராசியில் புதன், சுக்கிரன், சனி, ராகு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வருமானத்தில் உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளன. இப்போது அனுமன் ஜெயந்தி நாளில் உருவாகியுள்ள பஞ்சகிரக யோகஙத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகமானது உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படவுள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மனதில் சந்தோஷம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
