Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
100 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகும் பஞ்சகிரக யோகம்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Panchgrahi Yog In Pisces 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டம் ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இக்காலகட்டத்தில் மீன ராசியில் அற்புதமான கிரகங்களின் சேர்க்கையும், அதனால் ராஜயோகமும் உருவாகவுள்ளது. அதாவது மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய 5 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இந்த 5 கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவுள்ளன.
முக்கியமாக இந்த பஞ்சகிரக ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகிறது. இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகவுள்ள பஞ்சகிரக ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு நல்ல லாபத்தையும் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்ட கதவு திறந்து, பண மழை கொட்டும். மேலும் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளதால், சனி பகவானின் ஆசியால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்களின் வணிகம் வேகமாக முன்னேறும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். ஆனால் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். நீண்ட நாள் கனவு நனவாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பரம்பரை சொத்துக்களின் மூலம் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
