Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
500 ஆண்டுகளுக்கு பின் இன்று உருவாகியுள்ள பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Panch Divya Mahapurush Rajyog After 500 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் 24 ஆம் தேதி, அதாவது இன்று 5 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. அந்த ராஜயோகங்களாவன கஜகேசரி ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம், பத்ரா ராஜயோகம், மகாலட்சுமி ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் போன்றவை. இந்த ராஜயோகங்கள் ஒவ்வொன்றும் மிகவும் மங்களகரமான மகாபுருஷ ராஜயோகங்களாகும்.

இதில் கஜகேசரி ராஜயோகம் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையாலும், மாளவ்ய ராஜயோகம் சுக்கிரனாலும், பத்ரா ராஜயோகம் புதனாலும், சந்திரன் செவ்வாயால் மகாலட்சுமி ராஜயோகமும், சூரியன் மற்றும் புதனால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளன. இந்த 5 ராஜயோகங்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக உருவாகியுள்ளன.
இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். வணிகர்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலதிபர்கள் வியாபாராத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும், புகழும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் செல்வம் பெருகும்.
மிதுனம்
பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும். புகழ் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications