Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
கையில் இந்த அடையாளம் இருந்தா.. 35 வயசுக்கு மேல அதிர்ஷ்டம் பிரகாசிக்குமாம்.. உங்க கையில இருக்கா?
Palmistry: ஜோதிடத்தில் பல கிளைகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைரேகை ஜோதிடம். ஜோதிடத்தில் ஒருவரது ராசியைக் கொண்டு, அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம் குறித்த விஷயங்கள் கூறப்படுகின்றன. அதேப் போல் கைரேகை ஜோதிடத்தில் ஒருவரது உள்ளங்கையில் உள்ள ரேகைகளைக் கொண்டு, அந்நபரைப் பற்றி பல விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன.
உலகில் பிறந்த ஒவ்வொருவரின் கையில் உள்ள ரேகைகளும் தனித்துவமானவை. அதனால் தான் ஒருவரது தனித்துவமான அடையாளத்திற்கு கைரேகைகள் ஒரு முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கைகளில் உள்ள ரேகைகள் மட்டுமின்றி, அந்த ரேகைகளால் உருவாகும் குறிப்பிட்ட அடையாளங்களும் ஒருவரைப் பற்றிய சிறப்பான விஷயங்களை வெளிப்படுத்தும்.

அந்த வகையில் கையில் 'V' என்ற அடையாளத்தை ஒருவர் கொண்டிருந்தால், அந்நபர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதாக கைரேகை ஜோதிடம் கூறுகிறது. இப்போது இந்த அடையாளம் குறித்தும், இப்படியான அடையாளம் கொண்டவர்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.
உள்ளங்கையில் V அடையாளம்
உள்ளங்கையில் V அடையாளத்தைக் கொண்டிருந்தால், அந்நபர் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைவார். அதுவும் இப்படியான அடையாளத்தைக் கொண்டவர்கள் ஆரம்பத்தில் தங்கள் வேலையில் வெற்றியைப் பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட வயதை அடைந்த பின் எடுத்த வேலைகள் அனைத்திலுமே நல்ல வெற்றியை நிச்சயம் காண்பார்கள்.
எந்த வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்?
கைரேகை ஜோதிடத்தின் படி, இந்த V அடையாளமானது ஆள்காட்டி மற்றும் நடுவிரலுக்கு இடையே இருப்பது தான் மிகவும் நல்லது. இந்த இடத்தில் அடையாளத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு 35 வயதிற்கு பின் அதிர்ஷ்டமானது பிரகாசிக்கும். 35 வயதை எட்டும் வரை இவர்கள் வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். ஆனால் 35 வயதை எட்டியலும் இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன் இரட்டிப்பாக கிடைக்கத் தொடங்கி, குறுகிய காலத்தில் உயர் நிலையை அடைவார்கள்.
அதிர்ஷ்டசாலிகள்
கையில் V அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள் இயற்கையாகவே அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதைத் தவிர, இத்தகையவர்களை திருமணம் செய்து கொண்டவர்களும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
ஆடம்பரமான வாழ்க்கை
கையில் V அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தால், உயர் பதவியில் தான் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும். குறிப்பா 30-35 வயதுகளில் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். இதனால் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.
சவால்களை கண்டு அஞ்சாதவர்
கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் V அடையாளத்தைக் கொண்டவர்கள் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். அதாவது கஷ்ட காலங்களிலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள். இவர்களுக்கு 35 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கி, 40 வயதில் ராஜ வாழ்க்கையை வாழத் தொடங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











