October Month Rasi Palan 2025: அக்டோபர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க..

October Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமான அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் அக்டோபர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் அக்டோபர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என அக்டோபர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

October Month Rasi Palan 2025 October 2025 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது உற்சாகமும், நம்பிக்கையும் நிறைந்த மாதமாக இருக்கும். அலுவலகத்தில் புதிய சவால்களை சந்திப்பீர்கள். இருப்பினும் அவற்றை தைரியமாக எதிர்கொள்வீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நல்ல பழக்கங்களைக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் வாழ்வில் சமநிலையைக் கொண்டு வரும். உங்களின் நீண்ட கால முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இருப்பினும் எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆனால் தம்பதிகளிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் நிறைந்த மாதமாக இருக்கும். இம்மாதத்தில் புதிய நபர்களை சந்திப்பீர்கள் மற்றும் அவர்கள் எதிர்காலத்தில் உதவியாக இருப்பார்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை, சுவாச பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய மாதமாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிலும் அவசரப்படக்கூடாது. பொறுமையாக எதையும் கையாள வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் உங்களுக்கு முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் கடின உழைப்பும், பொறுப்பும் நிறைந்த மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகள் பாராட்டப்படும். இருப்பினும் இம்மாதம் சற்று மன அழுத்தம் நிறைந்து இருக்கும். நிதி நிலைமை மேம்படும். குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கும். இருப்பினும் சிறப்பாக சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இம்மாதத்தில் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் வளர்ச்சிக்கான மாதமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகளை கண்டுபிடிப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் மாற்றத்தைக் கொண்டு வரும் மாதமாக இருக்கும். வேலையில் புதிய சவால்களை சந்திப்பீர்கள் மற்றும் அவற்றை சிறப்பாக சமாளிப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் உங்களின் திட்டங்களை செயல்படுத்த ஏற்ற மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வேலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். மாதத்தில் தொடக்கத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும் உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் உங்களின் படைப்பாற்றல் மற்றும் யோசனைகள் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். தொழிலதிபர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் போதுமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்க சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 26, 2025, 23:19 [IST]
Desktop Bottom Promotion