Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது!
October Matha Rasipalan 2026 Lucky Zodiac Signs: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் விளைவாக மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் முதன்மையாக கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்படி நுழையும் போது புதனும் இந்த ராசியில் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையான புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. மேலும் இந்த ராசியில் சுக்கிரனும் இருப்பதால், திரிகிரக ராஜயோகமும் உருவாகவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
மேலும் சந்திரனும் இம்மாதத்தில் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கி சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளார். இப்படியான கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களால் அக்டோபர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. முக்கியமாக தொழிலில் முன்னேற்றம், நிதி நிலையில் உயர்வு போன்றவற்றை அந்த ராசிக்காரர்கள் காணவுள்ளனர். இப்போது அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் தங்கள் முயற்சிகளுக்கான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கன்னி
அக்டோபர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு இனிமையானதாக இருக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பல புதிய வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் புதிய மாற்றத்தைக் காணக்கூடும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் சாதனை புரிவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக நல்ல மாதமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதன் மூலம் தொழிலில் நல்ல உயரத்தை அடைவீர்கள். பண பரிவர்த்தனைகள் நல்ல ஆதாயங்களைத் தரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் மாதம் அற்புதமாக இருக்கும். அதுவும் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. இம்மாதத்தில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். இம்மாதத்தில் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


