Numerology: நியூமராலஜி படி இந்த 2 தேதில பிறந்தவர்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் எப்போதுமே வராதாம்...!

Numerology: எண் கணிதம் என்பது எண்களை அடிப்படையாகக் கொண்டு ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு ஜோதிட முறையாகும். எண் கணிதத்தில் மொத்தம் ஒன்பது எண்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் ஒரு ராசி இருப்பதைப் போலவே, அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் எண்கணிதத்தில் குறிப்பிட்ட எண் உள்ளது .

எண் கணிதத்தில் சில எண்கள் அதிர்ஷ்ட எண்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராது என்று கணிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதிகள் 4, 13, 22 மற்றும் 31 ஆக இருப்பவர்களுக்கு அவர்களின் விதி எண் 4 ஆகும். அதேபோல பிறந்த தேதிகள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 9 ஆகும்.

Numerology People Born On These Dates Have No Shortage of Money in Tamil

நியூமராலஜி படி இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை இருக்காது. எண் கணித கணிப்புகளின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய செல்வமும், அதிர்ஷ்டமும் கொண்டவர்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் துணைக்கு இருந்தாலும் பொதுவாக இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள். அதுதான் இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையைக் கொடுக்கிறது.

பண அதிர்ஷ்டம்

செவ்வாய் 4 மற்றும் 9 எண்களின் மக்களை ஆளும் கிரகமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பேரார்வம் கொண்டவர்கள். இவர்கள் அச்சமற்றவர்கள் மற்றும் எதையும் எதிர்கொள்ளும் தைரியசாலிகள்.

ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால், அதில் வெற்றி பெற்ற பிறகுதான் மூச்சு விடுவார்கள். அவர்களின் அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் பணத்துக்கும், மகிழ்ச்சிக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. அவர்கள் தந்தையிடமிருந்து ஏராளமான செல்வத்தைப் பெறுகிறார்கள்.

அனைவரையும் மகிழ்விப்பவர்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்விக்கிறார்கள். மற்றவர்களை மகிழ்விக்க அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். நல்லதோ கெட்டதோ அவர்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும். அவர்கள் எப்போதும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். அதிகமாக சிந்திக்கும் பழக்கம் அவர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தலாம்.

இந்த எண்களில் பிறந்தவர்கள் தொழில் வல்லுநராக இருப்பார்கள். அனைவருடனும் கலந்து பழகுவது அவர்களின் இயல்பாகும். அவர்கள் விரைவில் நண்பர்களை உருவாக்குகிறார்கள், அவர்களுக்கு எதிரிகளை விட நண்பர்களே அதிகம் இருப்பார்கள். ஆரம்பகால வாழ்க்கையில் வெற்றியைப் பெற அவர்கள் நிறைய போராட வேண்டியிருக்கும் மற்றும் செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் காலப்போக்கில் நிலைமை சிறப்பாக இருக்கும்.

பொருளாதார நிலை

அவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இவர்கள் அதிக பணம் செலவழிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் அதிக பணம் செலவழித்து பின்னர் வருத்தப்படுவார்கள். அவர்கள் தங்கள் ஆடம்பரத்தை அனைவரிடமும் வெளிப்படுத்த விரும்புவார்கள். அதனால்தான் பணத்தை தண்ணீர் போல செலவழிக்கிறார்கள்.

வேலையில் சிறந்து விளங்குவார்கள்

இந்த எண்களில் பிறந்தவர்கள் வணிகத்தை விட வேலைகளில் பெரிய உயரத்தை அடைகிறார்கள். இவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் சமூகத்தில் அனைவரின் மரியாதையையும் பெறுவார்கள். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது.

மனவலிமை மிக்கவர்கள்

4 மற்றும் 9 எண்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வும், நேர்மறை ஆற்றலும் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் நகைச்சுவை குணத்தால் யாருடைய மனதையும் வெல்வார்கள். அவர்களின் வாழ்க்கை முறை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் எல்லாவற்றையும் வித்தியாசமான முறையில் செய்ய விரும்புகிறார்கள். இவர்கள் மனம் மற்றும் உடல் இரண்டிலுமே வலிமையானவர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 30, 2024, 20:00 [IST]
Desktop Bottom Promotion