Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்... இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்...!
Numerology: நியூமராலஜி என்பது பல நூற்றாண்டுகளாக மக்களின் ஆளுமையைப் பற்றியும், எதிர்காலம் பற்றியும் சுவாரஸ்யமான ஜோதிட முறையாக இருந்து வருகிற்து. ஜோதிடம் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்லபடுவது போல எண் கணிதம் எண்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
சிலரிடம் யாராலும் மறுக்க முடியாத வசீகர சக்தி இருக்கிறது, அவர்கள் தங்கள் கவர்ச்சியால் ஒரு அறையை ஒளிரச் செய்யும் நபர்கள், அவர்களை சந்திப்பவர்கள் அனைவரும் அவர்களுக்குள் என்ன மாயம் இருக்கிறது என்று சிந்திப்பார்கள்.

எண் கணிதத்தின் படி அவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள், அவர்களுக்குள் ஒரு தீவிரமான வசீகரம், லட்சியம் மற்றும் கடுமையான உணர்வுகள் கலந்திருப்பதாக நம்பப்படுகிறது, இது அவர்களை வசீகரமாணவர்களாகவும் மற்றும் சில நேரங்களில் கொஞ்சம் ஆபத்தானவர்களாகவும் மாற்றுகிறது.
ஆபத்தானவர்கள் என்பது எப்போதும் தீங்கு விளைவிப்பவர் என்று அர்த்தப்படுத்துவதில்லை, அது அவர்கள் சுமந்து செல்லும் தீவிரமான ஆற்றலைக் குறிக்கிறது. அனைத்து மாதத்திலும் 8, 16, 18 மற்றும் 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வலிமை, மனஉறுதி மற்றும் மகத்துவத்தை அடையும் திறனுக்காக அறியப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் நீங்கள் எளிதில் கடக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்களின் தீவிர வசீகரம் அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும், ஆனால் அவர்களின் லட்சியம் அவர்களை வலிமையான எதிரிகளாகவும் மாற்றும்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வெற்றிபெற வேண்டும் என்ற இடைவிடாத உந்துதலைக் கொண்டிருப்பார்கள், மேலும் அவர்கள் தொடங்கிய வேலையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். உதாரணமாக, எண் 8 அதிகாரம் மற்றும் செல்வத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 16 மற்றும் 18 போன்ற எண்கள் ஆன்மீக ஆழத்தையும், புத்திக்கூர்மையையும் கொண்டுள்ளன. இந்த எண்களில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தலைவர்களாக, தொலைநோக்கு பார்வையாளர்களாக அல்லது கிளர்ச்சியாளர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் விதிமுறைகளை மீறவும், எல்லைகளைத் தாண்டவும் பயப்படுவதில்லை.
அவர்களின் "ஆபத்தான" முகம் வாழ்க்கையை மிகவும் துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் வழிநடத்தும் திறனில் இருந்து வருகிறது, அது மற்றவர்களை அச்சுறுத்துவதாக இருக்கும். அவர்கள் தெளிவான நோக்கத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் இலக்குகளை நிறைவேற்றாத எவருடனும் அல்லது எதனுடனும் உறவுகளை துண்டிக்க துளியும் தயங்க மாட்டார்கள்.
அவர்களின் மனவலிமையும், உறுதியும் பாராட்டத்தக்கது என்றாலும், அவர்களின் தீவிரம் சில நேரங்களில் அவர்களை கோபக்காரர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் தோன்ற வைக்கும், குறிப்பாக அவர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவோ அல்லது அவமரியாதை செய்யப்பட்டதாகவோ உணர்ந்தால் அதற்காக அவர்கள் தீவிரமாக பழிவாங்குவார்கள்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஆபத்தானவர்கள் அல்ல. இந்த நபர்கள் தாங்கள் அக்கறை கொண்டவர்களிடம் வலுவான விசுவாச உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருவரை நேசிக்கும்போது, அவர்கள் மிகவும் ஆழமாக நேசிக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத்துணையை பாதுகாக்க அதிக முயற்சி எடுப்பார்கள். இருப்பினும், நீங்கள் அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தால், அவர்களின் ஆபத்தான முகம் வெளிப்படுவதை நீங்கள் காணலாம்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்லவர்கள் மற்றும் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதற்கு இடையே ஒரு நேர்த்தியான கோட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் சுற்றியிருப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள், ஆனால் சிறிது பயத்தையும் தூண்டுகிறார்கள். அது அவர்களின் தீவிரமான லட்சியமாக இருந்தாலும் சரி அல்லது அவர்களின் கடுமையான விசுவாசமாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு நீடித்த அடையாளத்தை விட்டுச் செல்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











