Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்க பிறந்த தேதிய சொல்லுங்க? உங்க திருமணம் காதல் திருமணமா இல்ல நிச்சயிக்கப்பட்ட திருமணமானு நாங்க சொல்றோம்...!
Numerology: ஜோதிடம் போலவே எண்கணிதமும் நமது ஆளுமை மற்றும் எதிர்காலம் பற்றி பல ரகசியங்களைக் கூறக்கூடும். நியூமராலஜி படி ஒருவரின் வாழ்க்கைப் பாதை எண் அவர்களின் காதல் வாழ்க்கை உட்பட அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் திறப்பதற்கான திறவுகோலைக் கொண்டுள்ளது. இந்த எண்ணை புரிந்துகொள்வதன் மூலம், காதல், உறவுகள் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய மதிப்புமிக்க தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த நபரை காதல் திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண பந்தத்தில் இணைவீர்களா? என்பதை உங்கள் வாழ்க்கைப்பாதை எண் கணிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைப்பாதை எண் என்பது உங்களின் பிறந்த தேதியின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையின் ஒற்றை இலக்கமாகும். இந்த பதிவில் உங்களின் வாழ்க்கைப்பாதை எண்ணின் அடிப்படையில் உங்களின் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கை பாதை எண் 1
உங்கள் வாழ்க்கை பாதை எண் 1 என்றால், உங்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. தலைமைத்துவ குணங்கள் கொண்ட நீங்கள் உங்கள் சுதந்திரத்தை அதிகம் மதிப்பவராக இருப்பீர்கள். நீங்கள் சமூக நிகழ்வுகள் அல்லது சுப விழாக்களில் துணையை நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் நம்பிக்கையும், வசீகரமும் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையைக் கொடுக்கும்.
வாழ்க்கை பாதை எண் 2
வாழ்க்கை பாதை எண் 2 இருந்தால், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் ஒற்றுமையை விரும்பும் நீங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை மதிக்கிறீர்கள். குடும்பம் சார்ந்த விழாக்கள் அல்லது சமூக நிகழ்வுகளில் உங்கள் துணையை நீங்கள் சந்திக்கலாம், மேலும் உங்களின் சமநிலை உணர்வு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் சிக்கல்களைத் தீர்க்க உதவும்.
வாழ்க்கை பாதை எண் 3
உங்கள் வாழ்க்கை பாதை எண் 3 என்றால், உங்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. விதிவிலக்கான படைப்பாற்றல் உள்ள நீங்கள் சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டை மதிக்கிறீர்கள். சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்குகள் அல்லது உங்கள் கலைப் படைப்புகள் மூலம் நீங்கள் துணையை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் புத்திக்கூர்மை மற்றும் வசீகரம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு வாழ்க்கைத்துணையை உங்களுக்கு வழங்கும், மேலும் உங்கள் இயல்பான தொடர்பு திறன்கள் வலுவான இணைப்பை உருவாக்க உதவும்.
வாழ்க்கை பாதை எண் 4
வாழ்க்கை பாதை எண் 4 இருந்தால், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எதார்த்த நடைமுறை மற்றும் பொறுப்புணர்வு கொண்ட நீங்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மதிக்கிறீர்கள். குடும்பம் அல்லது சமூக தொடர்புகள் மூலம் உங்கள் துணையை நீங்கள் சந்திக்கலாம், மேலும் உங்கள் எளிமையான இயல்பு, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் சிக்கல்களை எளிதில் தவிர்க்க உதவும்.
வாழ்க்கை பாதை எண் 5
உங்கள் வாழ்க்கை பாதை எண் 5 ஆக இருந்தால், உங்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. சுதந்திரம் மற்றும் சாகசங்களை விரும்பும் ஒரு நபராக, நீங்கள் உற்சாகத்தையும் ஆய்வுகளையும் மதிக்கிறீர்கள். பயணம், சமூக நிகழ்வுகள் அல்லது தன்னிச்சையான சந்திப்புகள் மூலம் உங்கள் துணையை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் வசீகரமும் தகவமைப்புத் திறனும் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஒருவரை வாழ்க்கைத்துணையாகக் கொடுக்கும், மேலும் உறவவுகள் மீதான உங்கள் இயல்பான ஆர்வம் உங்களுக்கு ஒரு வலுவான இணைப்பை உருவாக்க உதவும்.
வாழ்க்கை பாதை எண் 6
வாழ்க்கை பாதை எண் 6 இருந்தால், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. அக்கறையுள்ள மற்றும் பொறுப்பான நபரான நீங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை நீங்கள் மதிக்கிறீர்கள். உறவினர்கள் அல்லது சமூக தொடர்புகள் மூலம் உங்கள் துணையை நீங்கள் சந்திக்கலாம், மேலும் உங்களின் அக்கறையான இயல்பு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
வாழ்க்கை பாதை எண் 7
உங்கள் வாழ்க்கை பாதை எண் 7 ஆக இருந்தால், உங்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட நீங்கள், சுதந்திரத்தையும் சுய விழிப்புணர்வையும் மதிக்கிறீர்கள். ஆன்மீகத்தளங்கள் அல்லது அறிவுசார் விழாக்களில் உங்கள் துணையை நீங்கள் சந்திப்பீர்கள், மேலும் உங்கள் பகுப்பாய்வு இயல்பு உங்களுக்கு வலுவான தொடர்பை உருவாக்க உதவும்.
வாழ்க்கை பாதை எண் 8
வாழ்க்கை பாதை எண் 8 ஆக இருந்தால், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எதார்த்த நடைமுறை மற்றும் லட்சியம் சார்ந்த நபராக, நீங்கள் நிலைத்தன்மை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை மதிக்கிறீர்கள். குடும்பம் அல்லது வணிக தொடர்புகள் மூலம் உங்கள் துணையை நீங்கள் சந்திக்கலாம், மேலும் உங்கள் தன்னம்பிக்கை நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் உங்கள் திறன் உங்கள் துணையின் அன்பையும், மரியாதையையும் பெற்றுத்தரும்.
வாழ்க்கை பாதை எண் 9
உங்கள் வாழ்க்கை பாதை எண் 9 ஆக இருந்தால், உங்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. மனிதாபிமானம் மற்றும் காதல் உறவில் அதிக நாட்டம் கொண்ட நபராக, நீங்கள் சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டை மதிக்கிறீர்கள். திருமண நிகழ்வுகள் அல்லது அலுவலகத்தில் உங்கள் துணையை நீங்கள் சந்திப்பீர்கள், மேலும் உங்கள் இரக்க குணம் ஒரு வலிமையான திருமண உறவை உருவாக்க உதவும். நீங்கள் இயல்பாகவே தாராள மனப்பான்மை மற்றும் பச்சாதாபம் கொண்டவராக இருப்பதால், உங்கள் உறவில் அரவணைப்பையும், ஆழத்தையும் கொண்டு வருவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

