Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரராகும் யோகம் இருக்காம்.. உங்க ராசி என்ன?
November 2025 Planetary Transits: 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த நவம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் ராசிகளை, நட்சத்திரங்களை மாற்றியும், சில கிரகங்கள் வக்ரமாக அல்லது வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளன. இப்படியான கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் காணப்படும்.
அதுவும் நவம்பர் மாதத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். அதே வேளையில் தேவர்களின் குருவான குரு பகவான் கடக ராசியில் வக்ரமாகவுள்ளார். இது தவிர அசுரர்களின் குருவான சுக்கிரன் நவம்பர் 02 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் செல்லவுள்ளார்.

அதைத் தொடர்ந்து கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் நவம்பர் 16 ம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். மேலும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் விருச்சிக ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி 5 கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் நவம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவதோடு, கோடீஸ்வரராகும் யோகத்தையும் பெறலாம். இப்போது 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
நவம்பர் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. அதுவும் நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. பணிபுரிபவர்களுக்க நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடன் பிரச்சனைகள் தீரும். மனநிலை மேம்படும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மேஷம்
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இம்மாதத்தில் வாழ்வில் எதிர்பார்க்காத உயரத்தை அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் எதிர்பாராத வழிகளில் இருந்து நல்ல பண வரவை பெறலாம். இதன் மூலம் உங்களின் நிதி நிலை உயர்வதோடு, அந்தஸ்தும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். முக்கியமாக தொழிலில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன. உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். இம்மாதத்தில் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும் மற்றும் அவர்களின் ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications