Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
November 2025 Finance Horoscope: நவம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் நிதி ரீதியாக எப்படி இருக்கும் தெரியுமா?
November 2025 Finance Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் காணக்கூடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மற்றும் நட்சத்திரத்தை மாற்றவுள்ளன.
அதோடு சில முக்கியமான கிரகங்களான சனி, குரு ஆகியோரின் நிலையிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால் பல கிரகங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, தொழில் வாழ்க்கை மற்றும் நிதி நிலையிலும் பெரிய அளவில் மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக ஒருவரது நிதி நிலையில் நிறைய மாற்றங்களை காண நேரிடும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாகவும், இன்னும் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனையால் சிரமப்படவும் வாய்ப்புள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் நிதி ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! 2025 ஆண்டின் நவம்பர் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இம்மாதத்தில் கையில் பணம் குவியும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை இம்மாதத்தில் தொடங்கினால், எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் சந்திக்கும் மாற்றங்கள் உங்களை ஆச்சயிப்படுத்தும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். பயணங்களின் மூலம், நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் வேலையில் நல்ல முன்னேற்றத்தையும் வருமானத்தில் உயர்வையும் காணலாம். இம்மாதத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் உங்கள் விருப்பப்படி செய்ய முடியும். இம்மாதம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலையும் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை வலுவடையும். வேலைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். லாட்டரி வாங்கினால் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இம்மாதத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருத்துவமனை செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும் இம்மாதத்தில் உங்களின் திட்டங்களும் வெற்றி பெறும். ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பண விஷயத்தில் சற்று கவனமாக இல்லாவிட்டால், அது நிறைய சவால்களை சந்திக்க வைத்துவிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் மோசமாக இருக்கும். இருப்பினும் நிதி செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் வழக்கத்தை விட கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். இதன் விளைவாக நல்ல நிதி பலன்களையும் பெறலாம். வேலை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது. இருப்பினும் பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! நவம்பர் மாத தொடக்கத்தில் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப சூழலும் மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஆயினும் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் அதிகரிக்கும். அதை முடிந்தவரை கட்டுப்படுத்துவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் நிதி ரீதியாக சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். இம்மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் எதையும் சாதிப்பதற்கு பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் அடிக்கடி பண பிரச்சனையையும் சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது கடந்த மாதத்தை விட சிறப்பாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்துடன் வளர்ச்சியையும் காண்பீர்கள். உங்களின் நிதி நிலை வலுவடையும். இருப்பினும் முதலீடுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கார்களே! நவம்பர் மாதம் நிதி நிலையில் நல்ல உயர்வை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் பல சந்தோஷமான மாற்றங்கள் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நிதி ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். இம்மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் பல அழகான விஷயங்களை சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications