Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
நவம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
November 2024 Monthly Career Horoscope In Tamil: இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். நவம்பர் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும். மேலும் நவம்பர் மாதத்தில் வக்ர நிலையில் இருக்கும் சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இதனால் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது நவம்பர் மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்க்ள. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பும், அனுபவசாலிகளின் கருத்தைப் பெற்றால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வேலை தொடர்பான பயணங்களால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கம். புதிய திட்டத்தில் செயல்படுவீர்கள். இம்மாதத்தில் எந்த பயணங்களை மேற்கொள்வதைத் தள்ளிப் போடுவது நல்லது. இல்லையெனில் உங்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வெற்றிகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன் வேலை செய்வோரின் நடத்தையால் மிகவும் சிரமப்படுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு வேலையிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் சற்று கடினமாக உழைத்தால், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் புதிய முதலீடுகளை செய்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாயப்பக்களும் உள்ளன.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நவம்பர் மாதம் பணியிடத்தில் பெண்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களும் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்க முயற்சித்தால் நல்லது. எந்த விதமான சர்ச்சைகளிலும் ஈடுபடாமல் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், இம்மாதம் தொழில் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய மாதம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் பணியிடத்தில் ஒருவித மன அமைதியின்மையுடன் இருப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பான மாதமாகும். இம்மாதத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். முதலீடுகளால் நன்மை பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இம்மாதம் நல்ல லாபத்தைத் தரும் மாதமாக இருக்கும். தொழில் ரீதியாக லாபகரமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் நல்ல செய்திகளை அதிகம் பெறுவார்கள். பணியிடத்தில் தங்களின் கருத்தை தெரிவிப்பதன் மூலம், உங்களால் ஒரு பெரிய நன்மை உங்கள் அலுவலகத்திற்கு கிடைக்கும். மாத இறுதியில் தொழில் ரீதியாக பல சாதனைகளைப் புரிவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் அனைத்தும் நன்றாக இருந்தாலும், ஏதாவது ஒன்றை நினைத்து ஒருவித கவலையுடனே இருப்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மொத்தத்தில் தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நல்ல நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஆனால் பணியிடத்தில் திடீரென சிரமங்கள் அதிகரிப்பதால், மனம் சற்று அழுத்தமாக இருக்கும். இம்மாதத்தில் வேலை தொடர்பான பயணங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டு வேலை செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். எந்த ஒரு முதலீடுகளை செய்ய நினைத்தாலும், நன்கு கவனமாக சிந்தித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications