Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
2026 புத்தாண்டின் முதல் நாள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமான நாளா இருக்கும்..
New Year 2026: பொதுவாக புத்தாண்டின் முதல் நாள் ஒவ்வொருவருக்குமே சற்று சிறப்பானது. மேலும் இந்நாள் சந்தோஷம், நம்பிக்கை மற்றும் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. எப்போதுமே ஒரு புதிய ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருந்தால், அந்த ஆண்டு முழுவதுமே நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த புத்தாண்டின் முதல் நாளில் பல மங்களகரமான சுப யோகங்கள் மற்றும் அரிய ஜோதிட நிகழ்வுகள் நிகழவுள்ளன. அதில் சதுர்கிரக யோகம், புதாதித்ய யோகம், சூரிய மங்கள சேர்க்கை போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு இந்த புதிய ஆண்டின் முதல் நாளில் பிரதோஷம் வருவதால், சிவபெருமானின் ஆசியுடன் இந்த புத்தாண்டு தொடங்குகிறது.

மேலும் இந்த நாளில் ரோகிணி நட்சத்திரத்துடன் ரவி யோகமும் சேர்ந்து வருகிறது மற்றும் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருப்பார். இவற்றால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2026 புத்தாண்டின் முதல் நாள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 புத்தாண்டின் முதல் நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய தொடர்புகள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். செல்வத்தை ஈட்ட புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 புத்தாண்டின் முதல் நாள் அதிர்ஷ்டமாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும். நிதி நிலைமை திடீரென்று உயரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2026 புத்தாண்டின் முதல் நாள் அற்புதமாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பதை நிரூபிப்பீர்கள். உதவும் குணம் உங்களுக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தரும். உங்களின் பேச்சு இனிமையாக மாறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். மனநிலை சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
