Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்!

Navratri 2026: இந்தியாவில் நவராத்திரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். கொடூரமான அரக்கனான மகிஷாசுரனுடன் துர்கா தேவி போர் புரிந்த 9 நாட்கள் தான் நவராத்திரி. இந்த 9 நாட்களும் துர்கா தேவியின் ஒவ்வொரு வடிவங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 19 ஆம் தேதி மகா நவமி/ஆயுத பூஜையும், அக்டோபர் 20 ஆம் தேதி விஜய தசமியில் முடிவடைகிறது.

Navratri 2026 Goddess Durga Riding On An Elephant Will Bring Wealth And Prosperity To These Zodiac Signs

ஒவ்வொரு ஆண்டின் நவராத்திரியிலும் துர்கா தேவி பயணித்து வரும் வாகனம் கொண்டு அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்குவதால் துர்கா தேவி யானை வாகனத்தில் துர்கா தேவி வருவதாக கூறப்படுகிறது.

இப்படி யானை வாகனத்தில் அம்மன் வருவது நன்மையைக் குறிப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவும் துர்கா தேவி யானை மீது சவாரி செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரியானது நிறைய நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகின்றன. இப்போது 2026 நவராத்திரியில் யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரியானது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை பேசி தீர்க்க முயற்சிப்பது நல்லது. புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிட்டால், தங்களின் வருமானம், சேமிப்பு கொண்டு முடிவெடுக்க இக்காலம் உகந்ததாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நவராத்திரியானது நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவுகளை திட்டமிட்டு செய்தால் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நவராத்திரியானது நம்பிக்கையூட்டும் காலமாக இருக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும் மற்றும் மங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். ஆனால் செலவுகளை கட்டுப்படுத்தினால் நிறைய பணத்தை சேமிக்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நவராத்திரியானது கடன் சுமையை சீரமைப்பது, செலவுகளை கட்டுப்படுத்துவது, புதிய நிதி திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தும் காலமாக இருக்கும். திடீர் பண வரவு கிடைக்கும் என்று நம்பி அவசரப்பட்டு செலவுகளை செய்யாமல், எந்த ஒரு நிதி முடிவுகளையும் பொறுமையாக யோசித்து அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, October 11, 2026, 23:52 [IST]
Desktop Bottom Promotion