Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
விநாயகர் சதுர்த்தியில் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Navpancham Yog On Ganesh Chaturthi 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் புதன் ஏற்கனவே உள்ளார். இதனால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில், அதுவும் விநாயகர் சதுர்த்தி நாளான ஆகஸ்ட் 27 ஆம் தேதி சுக்கிரனும் நெப்டியூனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாகவுள்ளார்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பார்கள். விநாயகரின் அருளால் செல்வம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மொத்தத்தில் விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட கதவு திறந்து, எதிர்பாராத அளவில் ஒரு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது. இப்போது விநாயகர் சதுர்த்தி நாளில் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கப் போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நிதி நிலைமை மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத அளவில் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். இதனால் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வணிகர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
மீனம்
விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகமானது மீன ராசிக்காரர்களுக்கு வாழ்வின் பல வழிகளில் சாதகமாக இருக்கப் போகிறது. ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications