Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சிம்ம ராசிக்கு சென்றுள்ள சந்திரன்: இந்த 3 ராசிக்கு இன்று முதல் அடுத்த 2 நாட்கள் அதிர்ஷ்டமா இருக்கும்...
Moon Transit In Leo On 01 June 2025: 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தின் முதல் நாளே சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஜூன் 01 ஆம் தேதி சந்திரன் தனது சொந்த ராசியான கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். நவகிரகங்களில் சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இந்த சந்திரன் உணர்ச்சிகள், மனம் மற்றும் நிலைத்தன்மையின் காரணியாக கருதப்படுவதால், சந்திரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், வாழ்வின் இந்த அம்சங்களில் இதன் தாக்கம் தெரியும்.
அதுவும் ஜூன் 01 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால், அடுத்த இரண்டரை நாட்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இந்த பெயர்ச்சியின் தாக்கம் இருக்கும். அதில் சில ராசிக்காரர்களின் மீது சூரியனின் சிறப்பான செல்வாக்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இப்போது சிம்ம ராசிக்கு சென்றுள்ள சந்திரனால் இன்று முதல் அடுத்த 2 1/2 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகளில் இருந்த தவறான புரிதல்கள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சனைகள் குறையும். திருமணமாவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் நல்ல பிணைப்பு ஏற்படும். உறவுகள் வலுவடையும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். செலவுகள் கட்டுப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். கார் வாங்கும் கனவு நனவாகும். முக்கியமாக சூரியனின் ஆசியால் தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பதட்டங்களும், சிக்கல்களும் நீங்கும். திருமணமானவர்களுக்கு துணையுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். படைப்புத் துறைகளில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தந்தையுடன் பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல ஆதாயத்தைத் தரும் வகையில் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications