Latest Updates
-
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள மகாபாக்ய யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Moon Mars Make Mahabhagya Rajyog On 25 August 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியுமாவார். 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் செவ்வாய், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறார். இந்த கன்னி ராசியில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் கன்னி ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையின் காரணமாக மிகவும் மங்களகரமான மகாபாக்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது கன்னி ராசியில் உருவாகியுள்ள மகாபாக்ய ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாபாக்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான காகதவுகள் திறக்கும். ஐடி, ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் தேவையில்லாமல் யாருடனும் மோதாமல், அமைதியாகவும், சமநிலையிடனும் இருந்தால், நல்ல பலன்களைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாபாக்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள். காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இருந்தாலும், எந்த ஒரு வேலையிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பத்தைத் தவிர்க்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால் வெற்றி பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
