Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
லட்சுமி நாராயண ராஜயோகம்: நவம்பரில் இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது...
Lakshmi Narayan Rajyog In November 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றியும், யோகங்களை உருவாக்கியும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
அதே வேளையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்ச, படிப்பி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் ஒன்றிணையும் போது மிகவும் மங்களகரமான யோகமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். இந்நிலையில் சுக்கிரன் மற்றும் புதன் விருச்சிக ராசியில் ஒன்றிணையவுள்ளனர்.

இதன் காரணமாக லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது நவம்பர் மாதத்தில் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கப்போகிறது.
இதன் விளைவாக நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகிறது, பணக்கஷ்டத்திற்கு முடிவு வரும், தொழில் செழிக்கும். இப்போது சுக்கிரன் மற்றும் புதனால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவுகள் இனிமையாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். முக்கியமாக வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். இதன் மூலம் பண பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது இந்த யோகத்தால் தீரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications