Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
புதன்-சுக்கிரன் உருவாக்கும் தசாங்க ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்களாம்...!
ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சில சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் நவம்பர் 7, 2025 வெள்ளிக்கிழமை மதியம் 12:21 மணி முதல், புதனும்-சுக்கிரனும் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது.
நவம்பர் 7 ஆம் தேதி, புதனும் சுக்கிரனும் ஜோதிடத்தில் 'தசாங்க' என்று அழைக்கப்படும் 36° கோணத்தை உருவாக்குகின்றன. இது மிகவும் அரிய ஜோதிட நிகழ்வாகும். இந்த அரிய நிகழ்வால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தசங்கா யோகத்தால் சிறப்பான நன்மைகளை அடையப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இந்த அரிய ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அடைய முடியும். நீங்கள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெறலாம், செலவுகளைக் குறைக்கலாம் மற்றும் சேமிப்பை அதிகரிக்கலாம். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நீங்கள் நற்பலன்களை அனுபவிப்பீர்கள்.
உங்கள் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், நீங்கள் விரும்பும் அனைத்தையும் சாதிக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். வேலையில்லாத மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்க இது ஒரு சரியான நேரமாகும்.
கன்னி
இந்த அரிய கிரக சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகிறது. இந்த யோகத்தால் நீங்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாத கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், தேர்வு முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
விருச்சிகம்
தசாங்க ராஜயோகம் விருச்சிக ராசிகாரர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கப் போகிறது. இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில், நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட சில பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க முடியும். அவர்களை நீண்ட காலமாக துன்புறுத்தி வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இந்த காலகட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொண்டுவரும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் இலக்கை அடைய முடியும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
தசாங்க ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்கப்போகிறது. இந்த யோகத்தால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையப் போகிறது. அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்களின் சேமிப்பு உயர்ந்து பொருளாதார நிலை வலுப்பெறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
