Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
வெத்தலையை இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்...!
Vethalai Chutney Recipe in Tamil: மழைக்காலத்தில் பொதுவாகவே அனைவருக்கும் எளிதில் சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட துவங்கும். அதைக் கருத்தில் கொண்டு நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இந்த பொருட்களை பெரும்பாலும் நாம் சூப் அல்லது கஷாயமாக செய்து கொடுப்போம். அப்படி கொடுக்கும் போது குழந்தைகள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
சளியை விரட்டும் உணவுகளை அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க மிகவும் சரியான வழி சட்னி தான். நாம் பொதுவாக பயன்படுத்தும் வெற்றிலை கூட சளியை விரட்டும் சிறந்த பொருளாகும். எனவே வெற்றிலையை சட்னியாக அரைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் அதனை இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து அவர்களுக்கே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது அவர்களை சளியாக ஏற்படும் பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும்.

உங்களுக்கு ஆரோக்கியமான வெற்றிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெற்றிலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வெற்றிலை - 10
- தக்காளி - 3
- புளி - நெல்லிக்காய் அளவு
- மிளகு - 15
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- உளுந்து - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 8
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எள் - ஒரு ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம், கடலைப்பருப்பு, தனியா, உளுந்து, வர மிளகாய், பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- உளுந்து லேசாக நிறம் மாறியதும் அதில் எள், மிளகு இவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
- அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு அதை தனியாக எடுத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.
- அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புளி இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும்.
- தக்காளி நன்கு வெந்து கூழ் பதத்திற்கு வரும் அளவிற்கு வதக்க வேண்டும். அதே நேரத்தில் வெற்றிலையை எடுத்து அதன் நடுவில் இருக்கக்கூடிய நரம்பை நீக்கி சிறிது சிறிதாக கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.
- தக்காளி நன்றாக வெந்து கரைந்த பிறகு எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையை அதில் சேர்த்து நன்றாக சுருளும் வரை கிளற வேண்டும்.
- வெற்றிலை நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து நாம் ஏற்கனவே வறுத்து ஆற வைத்திருந்த பொருட்களை அதில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு தக்காளி வெற்றிலையை அரைத்து வைத்த அந்த பொடியுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால் இந்த சட்னியுடன் கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைத்து விட்டு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து, கருவேப்பிலை, வர மிளகாய் இவற்றை போட்டு சட்னி மீது கொட்டி நன்கு கிளற வேண்டும்.
- அவ்வளவுதான் அருமையான மற்றும் ஆரோக்கியமான வெற்றிலை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications