Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
1 வருடத்திற்கு பின் விருச்சிகத்தில் நிகழும் புதன் சுக்கிர சேர்க்கை: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்
Mercury-Venus Conjunction In Scorpio After 1 Year: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகயை மாற்றும். அவ்வாறு மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியிருக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகி, அவையும் மனித வாழ்க்கையில் பலவாறு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வருகிற அக்டோபர் மாதத்தில் புதனும், சுக்கிரனும் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளனர். இதனால் விருச்சிக ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இந்த விருச்சிக ராசிக்கு அக்டோபர் 13 ஆம் தேதி சுக்கிரன் நுழையவுள்ளார். அதன் பின் அக்டோபர் 29 ஆம் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைவார்.

இதனால் இந்த விருச்சிக ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்ந்து, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது புதன் சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் சமூகத்தில் இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அறிவாற்றல் மேம்படும். அதனால் பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் அறிமுகத்தால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சு இனிமையாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
