Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஆண்டின் கடைசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
Mercury Transit In Sagittarius 2025: வேத ஜோதிடத்தில், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் 2025 ஆம் ஆண்டின் கடைசியில் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியானது டிசம்பர் 29 ஆம் தேதி குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றத்தைக் காணவுள்ளனர்.

குறிப்பாக தொழில், நிதி, கல்வி போன்றவற்றில் சாதகமான பலன்களைப் பெறவுள்ளனர். மேலும் பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இப்போது 2025 ஆம் ஆண்டின் கடைசியில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டரைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். புதனின் ஆசியால் பேச்சுத்திறன் மேம்படும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதலுடன், பிணைப்பும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறலாம். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். வாழ்வில் புதிய நபர்களை சந்திக்கலாம். கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications