Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
10 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 2 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது
Mercury Transit In Leo And Magha Nakshatra On 30 August 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது தங்களின் நிலையை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட புதன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரிய பகவானின் சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார்.

அதே நாளில் தான் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கும் புதன் நுழையவுள்ளார். இப்படி ஒரே நாளில் ராசியையும், நட்சத்திரத்தையும் புதன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றியுள்ளார். இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வை காணவுள்ளனர். அதோடு பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது 10 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 2 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் பல முக்கியமான வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் உள்ளோருடனான உறவு சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களின் செயல்திறன் மேம்படும். இதன் மூலம் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
