Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Mercury Transit In Ashwini Nakshatra On May 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். கிரகங்களிலேயே புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். இந்த புதன் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், விவாதம் ஆகியவற்றின் காரணியாவார். புதன் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இப்படி புதனின் நிலையில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் புதன் வருகிற மே 07 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது புதன் அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது.

புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல மகத்தான வெற்றியைப் பெறுவதோடு, பெரும் நிதி நன்மைகளையும் பெறுவார்கள். இப்போது புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் பணம் தொடர்பான எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக இருப்பது நல்லது. எந்த வேலை செய்தாலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதனின் அருளால் அதிர்ஷ்ட கதவு திறந்து வெற்றியும், பணமும் குவியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய நன்மைகள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகளில் இருந்து நல்ல நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக, மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். எந்த வேலையை செய்யும் போதும் அசால்ட்டாக இருக்காமல், சற்று எச்சரிக்கையுடன் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிறைய செல்வத்தைக் குவித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் வேலைக்காக இடத்தை மாற்ற வேண்டியிருக்கும். இந்த இடமாற்றம் நல்ல பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications