Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
புதன் உதயமாவதால் மார்ச் இறுதியில் இந்த ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது...
Mercury Rise In Pisces On March 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இந்த புதன் தான் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களிலேயே புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
இந்த புதன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் மார்ச் 15 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்க தொடங்கியதோடு, மார்ச் 17 ஆம் தேதி அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி மீன ராசியில் புதன் உதயமாகவுள்ளார். அஸ்தமன நிலையில் கிரகங்கள் பலவீனமாக இருக்கும் மற்றும் அந்த கிரகத்தால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகளும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் புதன் மீன ராசியில் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் திடீர் செல்வத்தைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. இப்போது மீன ராசியில் புதன் உதயமாவதால் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மற்றும் அதில் சிறப்பான செயல்திறனால் வெற்றியையும் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தை இக்காலத்தில் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலர் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும், வெற்றிகளையும் பெறலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கும் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications