Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூலை 18 முதல் கடகம் உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது!
Mercury Retrograde In Cancer On 18 July 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது பின்னோக்கி வக்ர நிலையிலும் பயணிக்க தொடங்கும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூலை 18 ஆம் தேதி புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், சிக்கிய பணத்தையும் பெறக்கூடும். இப்போது கடக ராசியில் புதன் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதனின் ஆசியால் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் நிலை வலுவாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
