Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
50 வருடம் கழித்து கருட பஞ்சமி நாளில் நிகழும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
Mercury Nakshatra Transit On Garuda Panchami 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமல்லாமல், நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. அவ்வாறு கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன், ஜூலை 29 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, புதன் பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்.

ஜோதிடத்தில் சனியும், புதனும் நட்பு கிரகங்களாவர். இதனால் புதன் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வது சற்று சிறப்பான பலன்களையே தரும். அதுவும் இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதோடு வருமானத்தில் உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
முக்கியமாக இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியானது 2025 ஜூலை 29 ஆம் தேதி கருட பஞ்சமி நாளில் நிகழ்கிறது. கருட பஞ்சமியானது ஆடி அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியில் வரும். இந்த நாளானது விஷ்ணுவின் வாகனமான கருடன் பிறந்த நாளாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கருட பஞ்சமி நாளில் புதன் நட்சத்திர பெயர்ச்சியானது நிகழ்வது சற்று சிறப்பானது. இப்போது கருட பஞ்சமி நாளில் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்னன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்ல முன்னேற்றத்தைத் தரும். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். குறிப்பாக இக்காலகட்டத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியானது வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெற உதவும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கலாம். முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். முக்கியமாக திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் இக்காலத்தில் சில நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications