Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
குரு புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுகிட்டு பணமழை கொட்டப்போகுது...
Mercury Jupiter Make Labh Drishti Yog 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
மறுபுறம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் தற்போது மீன ராசியில் உள்ளார். இந்நிலையில் மே 5 ஆம் தேதி, குரு பகவானும், புதனும் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் இருக்கும்.

இதனால் அவற்றின் சுப பார்வையால் சக்தி வாய்ந்த லாப திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக, பண மழை பொழியும் வகையில் இருக்கப் போகிறது. இப்போது குரு புதனின் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு புதனின் லாப திருஷ்டி யோகமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது. அதுவும் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
எந்த வேலையையும் கடினமாக செய்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு புதனின் லாப திருஷ்டி யோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டைப் பெறும். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திட்டமிட்ட வேலைகள் எதிர்பார்த்தபடி முடிவடையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு புதனின் லாப திருஷ்டி யோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். இதன் மூலம் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications