Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
புதன் மீன ராசியில் அஸ்தமனமாவதால் இந்த 3 ராசிக்காரர்கள் பெரிய துன்பங்களை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. புதன் புத்திசாலித்தனம், செல்வம் மற்றும் திறமையை வழங்கும் கிரகமாகும். எனவே, புதனில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் தற்போது சனியின் ராசியான மீனத்தில் அஸ்தமிக்கப் போகிறார். அனைத்து கிரகங்களும் ராசிகளை மாற்றுவதற்கு முன் அஸ்தமிக்கிறது. தற்போது, சனியும் தனது அஸ்தமனத்தை முடித்துவிட்டு மீன ராசிக்குள் நுழையப் போகிறார்.

புதன் அஸ்தமிக்கும்போது, சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் மறையப் போகிறது, அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல் நுழையப்போகிறது. தொழில் மற்றும் வணிகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இந்த ராசிக்காரர்கள் அடுத்த 20 நாட்களுக்கு பல தடங்கல்களையும், சவால்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசியின் ராசி அதிபதியாக புதன் இருக்கிறார். எனவே, புதன் அஸ்தமிக்கும்போது, அது கன்னி ராசிக்காரர்களுக்கு சில ஆபத்துகளை ஏற்படுத்தும். நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது.
அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனத்தால் மோசமான விளைவுகளை சந்திக்கப் போகிறார்கள். உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் ரகசியங்கள் உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.
வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடமிருந்து சில எதிர்மறையான கருத்துக்களை நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடி மோசமடைவதைத் தடுக்க தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் துணையிடம் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவ்ரகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். படிப்பில் அலட்சியமாக இருப்பது உங்கள் எதிர்காலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். படிப்பிலிருந்து கவனச்சிதறல்களை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்பது நல்லது. நண்பர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுங்கள். வேலை தேடுபவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் உங்களின் சேமிப்பு பாதியாகக் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
