Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இந்த 4 ராசி பெண்கள் அனைத்து ராசி ஆண்களையும் எளிதில் காதல் வலையில் வீழ்த்தி விடுவார்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் ஆளுமை, பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், தொழில், காதல், உறவுகள் போன்றவற்றை அவர்களின் ராசியின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். காதல் உறவுகள் என்றார் வரும்போது ஒவ்வொருவரும் அவர்களுக்கென தனிவழியைக் கொண்டிருப்பார்கள். ஆனால் அனைவரும் குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த பெண்களிடம் அனைத்து ராசி ஆண்களும் எளிதில் விழுந்து விடுவார்கள். அவர்களின் ஆளுமை, தோற்றம், பழக்கவழக்கம் என ஏதாவது ஒரு விஷயம் அனைத்து ஆண்களையும் கவர்வதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்களிடம் அனைத்து ராசி ஆண்களும் காதல் வயப்படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இந்த ராசி பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்கள். இவர்களின் பேச்சு யாருடைய மனதையும் எளிதில் வெல்லும். அவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சியானது. மிதுன ராசி பெண்கள் யாரையும் ஒரு நொடியில் தன்னைப் பற்றி பெருமையாக நினைக்க வைத்துவிடுவார்கள். இந்த ராசி பெண்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
அவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். அவரது நகைச்சுவையான குணம் யாரையும் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க வைக்கிறது. இளம் வயது ஆண்கள் மிக விரைவாக அவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மிகவும் அன்பான மற்றும் பரிசுத்தமான இதயம் கொண்டவர்கள். அவர்கள் இயற்கையாகவே அனைவரின் மீதும் அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்கள். அவர்களின் இயல்பு மிகவும் நட்பானது. அவர்கள் மீது மற்றவர்களுக்கு எப்போதும் நம்பிக்கை குறையாது. அவர்களைப் பற்றி யாரும் எப்போதும் தவறாகவும் கூறமாட்டார்கள். அதனாலேயே இந்த ராசி பெண்களிடம் ஆண்கள் மிக விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள்.
துலாம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தோற்றத்தில் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் மற்றும் அவர்கள் யாரையும் எளிதில் அவர்கள் மீது பைத்தியமாக்கக் கூடியவர்கள். அவர்களின் பழகும் விதம் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் சிறந்த காதல் துணையாக இருப்பார்கள் . அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களை விரும்பும் நபருடன் இருக்க விரும்புகிறார்கள். காதலில் இவர்கள் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இந்த குணத்திற்காகவே அனைத்து ராசி ஆண்களும் இவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்.
மகரம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஈடுசெய்ய முடியாத வசீகரம் கொண்டவர்கள். எந்தவொரு ஆணும் உடனடியாக அவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பேசுவதில் மிகவும் திறமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். தங்களைடைய இயல்பினால் யாருடைய மனதையும் எளிதில் வெல்கிறார்கள். மகர ராசி பெண்கள் சுதந்திரமானவர்கள்.
அவர்கள் தங்கள் அறிவுத் திறன் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியை அடைகிறார்கள். சமூகத்தில் மிகுந்த மரியாதையும் புகழும் பெறுவார்கள். அவர்கள் அற்புதமான முடிவெடுக்கும் திறன்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே உணர்கிறார்கள். இவர்களின் வசீகரம் மட்டுமின்றி இவர்களின் புத்திசாலித்தனமும் அனைத்து ஆண்களையும் எளிதில் ஈர்க்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

