May 2025 Horoscope: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...!

May 2025 Horoscope: மே மாதத்தில் நுழையும் போது ஒவ்வொரு ராசியும் பல்வேறு மாற்றங்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த மாற்றங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவர்களின் ராசியில் நடக்கும் கிரக மாற்றங்களை பொறுத்தே அமையும். சில ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான மாற்றங்களையும் அனுவிப்பார்கள்.

மே மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அனுபவித்தாலும் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அடையப் போகிறார்கள். வரப்போகிற 31 நாட்களும் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் மே மாதத்தில் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிற ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

May 2025 Horoscope Unlucky Zodiac Signs in May 2025 in Tamil

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மே மாதத்தில் சூரியனின் ராசி மாற்றத்தால் மிகவும் மோசமான பலன்களையும் பாதகமான சூழ்நிலைகளையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கூட, பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும், அவர்களின் இலக்குகளைப் பற்றிய புரிதல் இல்லாததால், சிக்கல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர்களைத் தொடர்ந்து வரும்.

பெரும்பாலும், தங்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று அவர்களால் சிந்திக்க முடியாமல் தயங்கி நிற்பார்கள். நிச்சயமற்ற தன்மை அவர்களை பல வழிகளில் பாதிக்கும். அவர்கள் மனதளவில் மிகவும் உடைந்து போகும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை நன்றாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, மே மாதத்தில் சனி மற்றும் ராகுவின் கிரக மாற்றங்கள் பல வழிகளில் மோசமான பலன்களைத் தரும். அவர்களின் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியைக் கெடுக்கும் பல சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும், அதை தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

பணக்கஷ்டம் அவர்கள் வாழ்க்கையில் நிறைந்திருக்கும். வேலையில் ஏற்படும் அழுத்தம் உங்களை மனரீதியாக சோர்வடையச் செய்யும், நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்காது. ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியை சீர்குலைக்கும்.

May 2025 Horoscope Unlucky Zodiac Signs in May 2025 in Tamil

துலாம்

மீன ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்கள் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம். அவர்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பல உணர்ச்சி மாற்றங்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அது குடும்பத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். நிதி நெருக்கடிகள் அதிகரிப்பதால், அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ராகுவின் செல்வாக்கும், சனியின் மாற்றமும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும், நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும், எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

மற்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்கக் கூடாது. திருமண வாழ்க்கையில் சவால்களும் பிரச்சனைகளும் அதிகரிக்கும். வழக்கமான வருமானத்திலும் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற கவலைகள் வாழ்க்கையில் அதிக நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, April 29, 2025, 15:24 [IST]
Desktop Bottom Promotion