Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாலிகா ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Mars Transit In Virgo Made Malika Rajyog 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும். அந்த வகையில் செவ்வாய் சமீபத்தில் தான், அதுவும் ஜூலை 28 ஆம் தேதி தான் கன்னி ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் புதனின் கன்னி ராசிக்கு சென்றுள்ளதால், அதன் விளைவாக மாலிகா ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகமானது செவ்வாய் இருக்கும் ராசிக்கு பின் உள்ள ஒவ்வொரு ராசியிலும் ஏதாவது தொடர்ந்து அமர்ந்திருந்தால், உருவாகும். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது மாலிகா ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும்ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் மாலிகா ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குழந்தைகளிடம் இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள். பல வழிகளில் இருந்து நற்செய்திகளுடன், பண வரவும் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் மாலிகா ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயங்கரளப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். அரசு வேலை செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். பெரும்பாலான வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் மாலிகா ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் வேகமாக அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவக்ளுக்கு இக்காலமா சாதகமாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஏராளமான நன்மைகளைப் பெறக்கூடும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications