Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
புஷ்ய நட்சத்திரத்திற்கு செல்லும் செவ்வாய்: ஏப்ரல் 12 முதல் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க...
Mars Transit In Pushya Nakshatra On 12 April 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். மற்றும் இவர் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாவார். ராசிகளில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது செவ்வாய் சந்திரனின் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது செவ்வாய் பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்.

செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் மற்றும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழிலதிபர்கள் நிறைய லாபத்தைப் பெறலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடை வைத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை காண்பார்கள். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திட்டமிட்ட ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வுடன், புதிய பொறுப்புக்களையும் பெறலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலம் அலுவலகத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
