Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
Kendra Yog On 01 September 2026: இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஜோதிடத்தின் படி செப்டம்பர் 01 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும், நீதிமான் சனி பகவானும் ஒருவருக்கொருவர் 90 டிகிரி தொலையில் இருந்து, கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகமானது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

பொதுவாக கேந்திர யோகமானது ஒருவருக்கு தைரியம், ஒழுக்கம், கடின உழைப்புக்கான சரியான வழிகாட்டுதலை தருகிறது. எனவே இந்த கேந்திர யோகத்தால், செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தொழில் மற்றும் வணிகத்தில் நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
அதுமட்டுமின்றி நிதி நிலைமை மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது செப்டம்பர் 01 ஆம் தேதி செவ்வாய்-சனியால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
கேந்திர யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். உங்களின் கருத்துக்களுக்கு பணியிடத்திலும், குடும்பத்திலும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கன்னி
கேந்திர யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறக்கும். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் அவசியம் கிடைக்கும்.
தனுசு
கேந்திர யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்
கேந்திர யோகத்தால் மீன ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். தொழிலில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன. பண விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


