Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
18 மாதம் கழித்து உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும்...
Mars Moon Make Mahalakshmi Rajyog 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.

செவ்வாய் சுமார் 18 மாதங்களுக்கு பின் மகர ராசிக்குள் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் மகர ராசியில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் சுமார் 18 மாதங்கள் கழித்து நிகழவிருக்கிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
இதன் விளைவாக சிக்கிய பணம் கைக்கு கிடைத்து நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது செவ்வாய் சந்திரனின் சேர்க்கையால் உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அந்த கனவு இக்காலத்தில் நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











