Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
ஒரே நாளில் நடக்கும் 3 கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது...
Mars Moon And Venus Nakshatra Transit On 3 September 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்டம்பர் 03 ஆம் தேதி செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் நட்சத்திரங்களை மாற்றவுள்ளன.
அதில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் சித்திரை நட்சத்திரத்திற்கும், மனதின் காரணியான சந்திரன் உத்திராடம் நட்சத்திரத்திற்கும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர். இப்படி 3 கிரகங்கள் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவது சற்று சிறப்பான நிகழ்வாகும்.

இந்த 3 கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதோடு திடீர் நிதி ஆதாயங்களும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றியும் கிடைக்கப் போகிறது.
மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது ஒரே நாளில் நடக்கும் 3 கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 3 கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சியால் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இனி முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். எடுக்கும் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேதி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 3 கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய செல்வத்தை குவிக்க முடியும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 3 கிரகங்களின் நட்சத்திர பெயர்ச்சியால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு புதிய கூட்டாளிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை அல்லது பதவி உயர்வு தேடி வரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications