Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
செவ்வாய் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..!
Mars Make Kendra Trikona Rajyog 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். மேலும் கிரகங்களில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். செவ்வாய் சொந்த ராசிக்கு சென்றுள்ளதால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது. அதோடு செவ்வாயால் கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, பலவிதமான நன்மைகளை தரப்போகிறது. இப்போது செவ்வாயால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நற்பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ருச்சக ராஜயோகமும் உருவாகியுள்ளதால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களும் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள் மற்றும் அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் இலட்சியத்தை அடைவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இது இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமையை உயர்த்தும். மொத்தத்தில் செவ்வாயால் உருவாகியுள்ள திரிகோண ராஜயோகம் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தையும், விருப்பங்களையும் நிறைவேற்றும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அற்புதமான நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ருச்சக ராஜயோகமும் உருவாகியிருப்பதனால் வாழ்வில் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பைப் பெறலாம். இது வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும. அரசிடமிருந்து நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலைகளுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல வேலையை பெறலாம். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல், நிர்வாகம் தொடர்புடைய துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அதுவும் ருச்சக ராஜயோகமும் சேர்ந்து உருவாகியிருப்பதால், எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். ஆராய்ச்சி, மருத்துவம், பொறியியல் அல்லது ஐடி துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
வெளிநாட்டில் படிக்கவும், வேலை செய்யவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குறிப்பாக செவ்வாயின் அருளால் இழந்த பணத்தை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். இன்னும் சிறப்பான பலனைப் பெற அனுமனை வழிபாடு செய்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications