Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைந்து, புதன் உதயமாவதால் இந்த 3 ராசிகளின் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது...
Mars Direct And Mercury Rise 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.
அதே சமயம், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் உதயமாகவுள்ளார்.

இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளிலும் ஏற்படும் மாற்றங்களால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
செவ்வாய் மற்றும் புதனின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு, தொழிலில் பலவிதமான நல்ல பலன்களும் கிடைக்கும். முக்கியமாக பணிபுரிபவர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று, அதில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மிதுனம்
செவ்வாய் மற்றும் புதனின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், மிதுன ராசிக்காரர்களின் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பண பிரச்சனைகள் முடிக்கு வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
தனுசு
செவ்வாய் மற்றும் புதனின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல்நலம் மேம்படும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல லாபத்துடன் முன்னேற்றமும் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது சரியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
