Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
ராகு செவ்வாய் உருவாக்கியுள்ள நவபஞ்ச ராஜயோகம்: 2025-க்குள் இந்த ராசிகளுக்கு செல்வந்தராகும் வாய்ப்பிருக்கு...
Mars And Rahu Made Navpancham Rajyog 2024: கிரகங்களில் ராகு என்றாலே எதிர்மறை ஆற்றலை பரப்பும் மோசமான கிரகமாக பலரும் கருதுகின்றனர். ஆனால் ராகுவும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களுள் ஒன்று. இந்த ராகு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், ஆண்டியும் அரசனாவான். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் ராகுவிற்கு உள்ளது.
ராகுவின் ஆசி இருந்தால், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இப்படிப்பட்ட ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் கடக ராசிக்குள் நுழைந்ததால், ராகு மற்றும் செவ்வாயின் நிலையால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தால் ராகு மற்றும் செவ்வாயின் ஆசியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக அந்த ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது ராகு செவ்வாயால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
நவபஞ்ச ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக செய்த கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு நடந்தால், எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறலாம்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும்.
கன்னி
நவபஞ்ச ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீணட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாட்களாக முடிவில்லாமல் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம். நிதி ரீதியாக புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கப்படும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications