Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
18 மாதம் கழித்து தனுசு ராசியில் உருவாகும் மங்கள ஆதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபம் குவியும்..
Mangal Aditya Rajyog 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 18 மாதங்கள் ஆகும். அந்த வகையில் செவ்வாய் டிசம்பர் மாத தொடக்கத்தில், அதாவது டிசம்பர் 07 ஆம் தேதி குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். இந்த தனுசு ராசியில் ஏற்கனவே செவ்வாய் இருந்ததால், இந்த சூரிய பெயர்ச்சியால் தனுசு ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியைப் பெறவுள்ளனர். அதோடு நல்ல நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது 18 மாதங்களுக்கு பின் தனுசு ராசியில் நிகழும் செவ்வாய் சூரிய சேர்க்கையால் உருவாகும் மங்கள ஆதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை நிலையானதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
பணிபுரிபவர்களுக்கு சாதகமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பழைய கவலைகள் நீங்கும். உடல் மற்றும் மன அழுத்தம் குறையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்து, செல்வம் போன்றவை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்துடன், புதிய பொறுப்புக்களையும் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக நிலுலையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ராகுவின் அருளால் விரைவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலைமை வலுவடையும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மன அழுத்தம் மற்றும் குழப்பம் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
