Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
மாளவ்ய ராஜயோகத்தால் இன்னும் 1 வருஷத்துக்கு இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானது. கிரகங்கள் நகரும் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகிறது. நவகிரகங்களில் முக்கிய கிரகமான சுக்கிரன் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரத்தைக் குறிக்கிறது. ஜூன் 2025 இல், சுக்கிரன் அதன் சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகிறது.
சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகப்போகிறது. இந்த ராஜயோகத்தின் பலன்கள் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த ஆண்டு வரை குறிப்பிட்ட ராசிகளுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. சுக்கிரன் சஞ்சாரம் காரணமாக ரிஷப ராசியின் லக்னத்தில் ராஜயோகம் உருவாகுவதால், அவர்களின் ஆளுமை மேம்படப்போகிறது. அவர்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்ளலாம், அவரை எதிர்காலத்தில் அவர்களுக்கு பயனளிக்கும். அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக மாறும், மேலும் இந்த காலத்தில் அவர்களின் ஒற்றுமையும், புரிந்துணர்வும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான திருமண வரன்களைப் பெறலாம். பல்வேறு துறைகளில் உள்ள அவர்கள் உறவினர்களின் ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் பல நேர்மறையான மாற்றங்களை வழங்கப்போகிறது. இந்த ராஜயோகம் கடக ராசியின் பதினொன்றாவது வீட்டில் உருவாகி இருப்பதால், அவர்களின் வருமானமும், பொருளாதார நிலையும் அதிகரிக்கும். இந்த யோகத்தால் வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் வருமானம் ஈட்ட முடியும். கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், இதனால் பல்வேறு பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்.
வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன, வேலையில்லாதவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் சேமிப்பதில் வெற்றி பெறுவார்கள், மேலும் முதலீடுகள் கணிசமான லாபத்தைக் கொடுக்கும். அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கிரன் அவர்கள் ராசியின் கர்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை அடையலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அவர்களின் வெற்றியாலும், பொருளாதார நிலையாலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளைத் சரியாக முடிக்க முடியும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

