Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
மாளவ்ய மகாபுருஷ ராஜயோகம்: ஜூன் 29 முதல் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Malavya Mahapurush Rajyog On 29 June 2025: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
தற்போது சுக்கிரன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வதால் மிகவும் மங்களகரமான மாளவ்ய மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. சுக்கிரன் இந்த ரிஷப ராசியில் ஜூலை 26 ஆம் தேதி வரை இருப்பதால், இந்த ராஜயோகத்தின் தாக்கம் ஜூலை 26 வரை நீடிக்கும்.

முக்கியமாக இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, திடீர் நிதி நன்மைகளையும் பெறுவார்கள். இப்போது சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரன் ரிஷபம், துலாம் அல்லது அதன் உச்ச ராசியான மீன ராசியின் ஜாதகத்தில் 1, 4, 7 அல்லது 10 ஆவது கேந்திர வீட்டில் இருக்கும் போது உருவாகும். இந்த ராஜயோகம் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும். இது தவிர, ஹன்ச, ருச்சக், பத்ர, சச போன்றவையும் மகாபுருஷ ராஜயோகங்களாகும். இந்த யோகங்கள் சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களால் உருவாகும். இப்போது ரிஷப ராசியில் உருவாகும் மாளவ்ய மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் சிறப்பான ஆசிகளைப் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் நிறைய ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவடையும். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம் பெருகும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏராளமான நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் திட்டமிட்டு வேலை செய்தால் நிறைய லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











