Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
50 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Malavya And Sukraditya Rajyog In Pisces 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் ஒரே வேளையில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகும். இது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் மீன ராசியில் மங்களகரமான மாளவ்ய ராஜயோகமும், சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது. இதில் மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீன ராசியில் இருப்பதால் உருவாகியுள்ளது. அதே சமயம் சுக்கிரன் மீன ராசியில் சூரியனுடன் ஒன்றிணைந்து பயணிப்பதால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒரே வேளையில் மீன ராசியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த இரட்டை ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
அதுவும் அந்த ராசிக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாகும், தொழிலில் வெற்றிகள் குவியும். இப்போது மீன ராசியில் உருவாகும் மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் வருமானத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். புதிய தொழிலைத் தொடங்கும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் முயற்சித்தால் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் முதல் வீட்டில் உருவாகியுள்ளதால், இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவடையும். சமூகத்தில் மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் மரியாதை கிடைக்கும். ஆளுமை மேம்படும். தொழில் குறித்து மிகப்பெரிய முடிவை எடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
