Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
மகாசிவராத்திரி அன்று உருவாகும் 3 ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுதாம்...!
மகா சிவராத்திரி என்பது இந்து மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விழாவாகும். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பல்வேறு நன்மைகளை அளிக்கும். இந்த வருட மகா சிவராத்திரி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் இது மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று வரும் மகா சிவராத்திரி, மூன்று சக்திவாய்ந்த ராஜ யோகங்களை உருவாக்கும் அரிய ஜோதிட நிகழ்வுகளை உருவாக்குகிறது. பிப்ரவரி 15 அன்று சதுர்கிரஹி, புதாதித்ய யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் என்ற 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த அரிய கிரக மாற்றங்கள், இந்த மகா சிவராத்திரியில் மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டம், லாபம் மற்றும் நேர்மறையான மாற்றங்களை உறுதியளிக்கின்றன. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மகாசிவராத்திரி அன்று உருவாகும் 3 ராஜயோகங்கள் மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்யப் போகிறது. சிவபெருமான் ஆசியால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். சிவபெருமானின் அருளால் மன அழுத்தம் மற்றும் ஏழரைச் சனியின் பாதிப்புகள் குறையும்.
கன்னி
மகாசிவராத்திரி அன்று உருவாகும் மூன்று அரிய யோகங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. இந்த ராஜயோகத்தால் அவர்களின் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது, அவர்கள் பணக் கஷ்டத்தில் இருந்து நிவாரணம் பெறலாம், புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான திருமண வரன்கள் வரலாம், அதே நேரத்தில் ஏற்கனவே திருமனமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் முன்னேற்றம் கவனிக்கத்தக்கதாக இருக்கும், அவர்கள் சில சாதனைகளை செய்யலாம். இந்த யோகத்தால் அவர்கள் அதிர்ஷ்டக்கதவு திறப்பதால் திடீர் ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த மங்களகரமான காலம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்கிறது.
கும்பம்
இந்த மகா சிவராத்திரி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சியால் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது சொத்து வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இது அதற்கு சிறந்த நேரமாகும். உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவர விலையுயர்ந்த பொருட்களுக்கும் நீங்கள் செலவிடலாம். வேலை தேடுபவர்களுக்கு சில நேர்மறையான செய்திகள் தேடிவரும். உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும், மேலும் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
இந்தக் காலகட்டம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் நீங்கள் மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். சரியான அணுகுமுறையுடன், இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடையலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

