Latest Updates
-
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம்
18 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கும் ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் தூங்கிகொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
Mahalaxmi Rajyog 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இதனால் இவர் அனைத்து ராசிகளையும் சுற்றி முடிக்க 18 மாதங்கள் ஆகும். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனுடன் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகமானது மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகங்களுள் ஒன்றாகும்.

இந்த யோகத்தினால் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
வேத ஜோதிடத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் விருச்சிக ராசியில் நுழைந்து, செவ்வாயுடன் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராசியில் செவ்வாய் 2 1/2 நாட்கள் வரை இருப்பார்.
இதன் காரணமாக இந்த ராஜயோகமும் 2 நாட்கள் வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தினால், சில ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். லட்சுமி தேவியின் ஆசியால் வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதி நிலைமை வலுபெறும். செல்வத்தில் உயர்வு ஏற்படும். வணிகர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களை அவ்வப்போது பெறக்கூடும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கனவுகள் நிறைவேறும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிக்கிய பணம் கைக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த யோகத்தால் உடல்நலம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications