Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மகாலட்சுமி ராஜயோகத்தால் ஜூன் கடைசியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Mahalakshmi Rajyog On 29 June 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசியில் நுழையவுள்ளார்.
இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் பெரிய நன்மைகளைப் பெறுவார்கள்.

ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகங்களுள் ஒன்று தான் மகாலட்சுமி ராஜயோகம். இந்த ராஜயோகமானது லட்சுமி தேவையுடன் தொடர்புடைய யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோகம் நல்ல அதிர்ஷ்டம், பண வரவு மற்றும் லட்சுமி தேவையின் அருளை வழங்குகிறது.
ஒருவரது ஜாதகத்தில் மகாலட்சுமி யோகம் உருவாகியிருந்தால், அது நீண்டகால செல்வம், புகழ், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அளிக்கும். இப்போது ஜூன் 29 ஆம் தேதி சிம்ம ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கினால் நல்ல பலன்களைப் பெறலாம். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவுள்ளது. இதனால் லட்சுமி தேவியின் ஆசியால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வணிகர்கள் பல்வேறு முதலீடுகளிலிருந்து நல்ல வருமானம் ஈட்டலாம். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் நலம் மேம்படும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற்று, நிறைய லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். மனநிலை மேம்படும். தொழில் ரீதியாக நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரன்களைப் பெறக்கூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications