Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
செப்டம்பர் 24-ல் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு லட்சுமி தேவியின் ஆசியால் செல்வம் குவியும்..
Mahalakshmi Rajyog On 24 September 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் தான் சந்திரன். இந்த சந்திரன் மனதில் காரணியாவார் மற்றும் இவர் கடக ராசியின் அதிபதியாவார். சந்திரன் வேகமாக ராசியை மாற்றுவதால், அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் சந்திரன் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாயுடன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். அதுவும் இந்த சேர்க்கை துலாம் ராசியில் நிகழவுள்ளது. இப்படி செவ்வாயும் சந்திரனும் ஒன்றிணைவதால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தை மகாபாக்ய யோகம் என்றும் அழைப்பர்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் லட்சுமி தேவியின் ஆசியைப் பெறக்கூடும். அதோடு நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வின் பல பகுதிகளில் நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் நீண்ட தூரம் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மேலும் நல்ல பொருள் இன்பங்களையும் பெறக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஏராளமான அளவில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனநிலை சிறப்பாக இருக்கும். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவை இக்காலத்தில் எடுப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புக்கள் உள்ளன. மன அழுத்தம் நீங்கி, மன அமைதி பெருகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். இக்காலத்தில் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். அதோடு நல்ல வெற்றியையும் பெறுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகி, உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications