Latest Updates
-
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் இந்த நாட்டின் மீது படையெடுக்கவே பயந்தார்களாம் - ஏன் தெரியுமா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க... -
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
ராகு-கேதுவின் அரிய கிரக சேர்க்கை இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டத்தை கொடுக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ஆடி மாத ராசி பலன் 2026: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? - ஜோதிடர் ஜெயலட்சுமி கணிப்புகள்! -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தண்ணி குழம்பு வையுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பச்சை மிளகாய் இருந்தா இந்த செட்டிநாடு மிளகாய் மண்டியை செய்யுங்க - காரமே இல்லாம சாப்பிட அருமையா இருக்கும் -
Sarcoma Awareness Month: சார்கோமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்த 4 நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்க உயிருக்கு எப்ப வேணாலும் ஆபத்து வரலாம் - சாணக்கிய தந்திரம்
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்...
Mahalakshmi Rajyog On 11 June 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்கள் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும். அப்படி ஜூன் மாதத்தில் ஒரு மங்களகரமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் மகாலட்சுமி ராஜயோகம்.

இந்த ராஜயோகமானது செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும். அதுவும் இந்த ராஜயோகமானது ஜூன் 11 ஆம் தேதி உருவாகவுள்ளது மற்றும் இந்த யோகம் ஜூன் 13 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் தொழில், நிதி, தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். அதுவும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பணமும், வெற்றியும் குவியப் போகிறது. இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மகாலட்சுமி ராஜயோகத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலைமை மேம்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
மிதுனம்
மகாலட்சுமி ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
மகாலட்சுமி ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். செலவுகள் குறையும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். திடீரென்று பல புதிய வழிகளில் இருந்து பணம் வந்து சேரும். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
மகாலட்சுமி ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த யோக காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். சிலருக்கு வெளிநாடு செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



